துணை தருமா
· One min read
எத்தனை தூரம் கடந்து வந்தேன்
எட்டாக்கனியாய் பறந்துவிட்டாய்
கண்விழி அதனில் பிடித்துவிட்டேன்
கைகளில் பிடிக்கவே மறந்துவிட்டேன்
(உன்னை) சேரும் நாட்கள் தேடுகிறேன்
பயணத்தில் நானோ தொலைகிறேன்
என்முன் மீண்டும் தோன்றிவிடு
உயிரை மீட்டுக் கொடுத்துவிடு
