அந்த கவி
அந்த கவி..
எதையோ செய்ய நினைத்து
நினைவில் கலக்கமடைந்து
கலக்கத்தில் காயமடைந்து
காயத்தால் கண்ணீரை வீணாக்கி விட்டான்
அந்த கவி..
எதையோ செய்ய நினைத்து
நினைவில் கலக்கமடைந்து
கலக்கத்தில் காயமடைந்து
காயத்தால் கண்ணீரை வீணாக்கி விட்டான்
உடல் விட்டு உயிர் வாழ்வது உயிர்மெய்யாகாதே போல்
அவள் விட்டு நான் வாழ்வது அன்றில் இலக்கணம் ஆகாதே
அன்றில் தொலைத்தது தமிழகமோ அவளை தொலைத்தது என்னகமே
உணர்வுகள் உயிர்மாறுமுன் சொல்லாமல் உயிர்விட்டதேன்
எத்தனை தூரம் கடந்து வந்தேன்
எட்டாக்கனியாய் பறந்துவிட்டாய்
கண்விழி அதனில் பிடித்துவிட்டேன்
கைகளில் பிடிக்கவே மறந்துவிட்டேன்
(உன்னை) சேரும் நாட்கள் தேடுகிறேன்
பயணத்தில் நானோ தொலைகிறேன்
என்முன் மீண்டும் தோன்றிவிடு
உயிரை மீட்டுக் கொடுத்துவிடு
Blog managed by Mugeshbabu.
This blog is part of the Mugesh Media and Mugesh Cable Service ecosystem, providing updates, insights, technical and non-technical content related to our services and art works.
You can find more information on our website